கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை - ராமநாதபுரத்தில் சோகம்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த காவிய தர்ஷினி என்பவர், திருச்செங்கோடு அருகே எளையாம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

இந்த நிலையில், அவர் தங்கியிருந்த விடுதியின் அருகே காவிய தர்ஷினி சடலமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், காவிய தர்ஷினியின் சகோதரர் கடந்த ஆண்டு உயிரிழந்ததால், மன உளைச்சலில் இருந்து வந்த அவர் கல்லூரி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. 

கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student sucide in ramanathapuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->