தேர்வு முடிந்து வீடு திரும்பிய கல்லூரி மாணவர்கள் - சரக்கு வாகனம் மோதி உயிரிழப்பு.!!
college students died for accident in karoor
கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தபாலாஜி என்பவரும் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிசிஏ 2-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று செமஸ்டர் தேர்வு எழுதிய இருவரும் கரூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அதன் படி இவர்கள் திருச்செங்கோடு அருகே சித்தாளந்தூர் என்ற இடத்தில் சென்றபோது எதிரில் வந்த சரக்கு வாகனத்தின் பக்கவாட்டில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானார்கள். இதில் தூக்கி வீசப்பட்ட மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சம்பவம் குறித்து போலீசாருக்கு அளித்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சரக்கு வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college students died for accident in karoor