திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - எப்போது தெரியுமா?
coming 13 local holiday in thiruvannamalai district
மகா தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளான டிசம்பர் திங்கள் 13-ம் நாள் (வெள்ளிக்கிழமை) அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 21 ஆம் நாள் சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுகிறது. மேலும் இது பொது விடுமுறை இல்லை என்பதால், 2024ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13-ஆம் நாளன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
coming 13 local holiday in thiruvannamalai district