வருகிற 22 ஆம் தேதி தூத்துக்குடியில் மதுபானக் கடைகள் மூடல்.!! - Seithipunal
Seithipunal


வருகிற 22 ஆம் தேதி தூத்துக்குடியில் மதுபானக் கடைகள் மூடல்.!!

கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டம் நடைபெற்றது. பல நாட்களாக நடைபெற்ற இந்த போராட்டம்100-வது நாளை எட்டியது. 

அன்றைய தினம் (22-5-2018) இந்தப் போராட்டம் கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தில் காவல் துறையினர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள், 2 பெண்கள் என 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

மேலும், 40 பேர் பெரிய அளவிலும், 64 பேர் சிறிய அளவிலும் காயமடைந்தனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், இந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் வருகிற 22-ம் தேதி தூத்துக்குடியில் செயற்பட்டு வரும் 53 மதுபான கடைகளும், பார்களும் மூடப்படுகிறது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மருத்துவர் செந்தில்ராஜ் அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming monday all tasmac shop close in thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->