கூரை வீடு ஒன்றுக்கு 20 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும்.. வட்டாட்சியரிடம் மனு வழங்கிய எம்.எல்.ஏ!
Compensation of Rs 20000 per thatched house MLA submits petition to Tahsildar
புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதியில்,கனமழை மற்றும் பெரும்புயலின் பாதிப்பால் சேதம் அடைந்த ஏழைகளின் கூரை வீடு ஒன்றுக்கு ரூ.10,000 இருந்து 20,000 நிவாரணம் வழங்க வலியுறுத்திஎம்.எல் .ஏ அனிபால் கென்னடி கோரிக்கை மனுவை வட்டாட்சியர் பிரிதிவியிடம் வழங்கினார்.
புதுச்சேரி ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் 48.4 சென்டிமீட்டர் மழை பதிவானது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு இது என கூறப்படுகிறது. இந்த வரலாறு காணாத மழை புதுச்சேரியில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உப்பளம் தொகுதிக்கு உட்பட்டப் பகுதிகள் பெரும்பாலும் நீர்நிலைகள் சூழ்ந்த இடங்களே அதிகமாக உள்ளது . மிகவும் தாழ்வானப் பகுதிகளில் ஏழை எளிய மக்கள் கூரை வீடுகள் அமைத்து தங்களின் வாழ்க்கையை நடத்தி வரும் பரிதாபமாக சூழலில் உப்பளம் தொகுதியில் அதிக அளவில் மக்கள் வசிக்கின்றார்கள் .
அப்படி வசிக்கும் ஏழைமக்களின் வாழ்வாதாரம் இயற்கை சீற்றங்களின் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பல இடங்களில் வீடுகள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் நிவாரணம் சம்பந்தமாக திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் உயர்திரு ஆ.பிரிதிவி.,, வட்டாட்சியர் மற்றும் நிர்வாக நடுவர் அவர்களை நேரில் சென்று அலுவலகத்தில் சந்தித்தார்.
கன மழை காரணமாக புதுச்சேரியின் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு நிவாரணங்களையும் மாண்புமிகு மாநில முதலமைச்சர் அறிவித்ததின்படி, சேதம் அடைந்த கூரை வீடு ஒன்றுக்கு 10,000 ரூ இருந்து .20,000ல் ரூபாய் வரை நிவாரணம் வழங்கி உதவும்படி சட்ட மன்ற உறுப்பினர் கேட்டு கொண்டார்.
கடல், பெரியவாய்கால், உப்பனாறு வாய்க்கால், நீர் நிலைகள் சூழ்ந்தப் பகுதிகளில் தான் உப்பளம் தொகுதி மக்கள் வசிக்கின்றனர். பாதிப்புகளை ஆய்வு செய்து சேதம் அடைந்த கூரை வீடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ரூபாய். 10,000 இருந்து 20,000 வரை நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கோரிக்கை வைத்து மனுக்களை வட்டாட்சியர் ஆ.பிரிதிவி.மற்றும் நிர்வாக நடுவர் அவர்களிடம் அளித்தார். உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் சந்திரன், செல்வம், அசோக், ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
English Summary
Compensation of Rs 20000 per thatched house MLA submits petition to Tahsildar