முறைகேடான நிதியில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம்.? ஆப்பு வைத்த தேசிய பட்டியலின ஆணையம்.!! - Seithipunal
Seithipunal


திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதியான அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை திட்டத்தை தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மட்டும் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு அரசு தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்த திட்டத்தில் தகுதியான குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் தமிழக முழுவதும் நியாய விலை கடை மூலம் பெறப்படுகிறது. மேலும் இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல் கட்டமாக ரூ.7,000 கோடி நடப்பு நிதி ஆண்டில் தமிழ்நாடு அரசு ஒதுக்கியதோடு ஒரு கோடி மகளிருக்கு இந்த உரிமை தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. 

இந்த நிலையில் தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மத்திய அரசால் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக தேசிய பட்டியலின ஆணையத்திற்கு இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் இரா.அன்புவேந்தன் கடந்த ஜூலை 27 ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் தேசிய பட்டியலின ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அதில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் முதன்மைச் செயலாளர் ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்தி தேசிய பட்டியல் இன ஆணையத்தின் முன்பு நேரிலோ அல்லது தபால் மூலமோ அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

திமுகஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் தற்பொழுது நிதி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுதியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Complaint against TNgovt misuse SCSP funds to urimai thogai scheme


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->