கன்னியாகுமரியில் பரபரப்பு!...அரசு ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியை சேர்ந்த பீட்டர் புஷ்பராஜ்  என்பவர், திங்கள்சந்தை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணிக்காக  திங்கள்சந்தை அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே உள்ள விடுதியில் தங்கி பணிக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பீட்டர் புஷ்பராஜின் அறை திறக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும், நேற்று அவரது அறையில்  இருந்து துர்நாற்றம் வீசியதாக சொல்லப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர் இது குறித்து இரணியல் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில்,  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையிலான போலீசார் , கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, பீட்டர் புஷ்பராஜ் உடல் அழுகிய நிலையில் தூக்குப்போட்டு உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,  இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Confusion in kanyakumari tragedy of government driver hanging himself


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->