அதிகாலையில் சோகம் - காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ எம். தண்டபாணி உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் அரசியல் களத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியில் தனது அரசியல் பயணத்தை துவங்கிய எம்.தண்டபாணி 1986-ம் ஆண்டு ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகித்தார். இதையடுத்து 1996 ம் ஆண்டு மாவட்ட கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். 

தொடர்ந்து 1998 முதல் 2013 வரை திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பு வகித்தார். மேலும், 2006 முதல் 2011 ம் ஆண்டு வரை வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட இவர் வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரசில் இணைந்து பணியாற்றினார். 

இந்த நிலையில், எம். தண்டபாணி கடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass ex mla m thandabani passed way


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->