நகைச்சுவை நடிகர் மனோபாலா மறைவிற்கு ஜி.கே.வாசன் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


நகைச்சுவை நடிகர் மனோபாலா மறைவிற்கு ஜி.கே.வாசன் இரங்கல்.!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனரும், தயாரிப்பாளரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா நேற்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருடைய மறைவு செய்தி கேட்டு திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் கட்சியினர் என்று அனைவரும் தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே. வாசன் தன்னுடைய இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ் சினிமாவில் இயக்குநராக, நடிகராக, தாயாரிப்பளராக பன்முகத் தன்மை கொண்ட திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து, திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரைப் பதித்தவர். சின்னத்திரையிலும் பல சீரியல்களை இயக்கி எல்லோர் மனதிலும் நிறைந்தவர். இவரின் மறைவு அவர்களது குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எதிர்பாராத பேரிழப்பாகும். 

அவரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass leader gk vasan condoles to actor manobala death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->