மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் காலமானார்.!!
congrass leader kumari anandhan passed away
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் குமரி அனந்தன். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரான இவர் வயது மூப்பு காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குமரி அனந்தனின் உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் குமரி அனந்தன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாக இருந்த குமரி அனந்தன் பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர். ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை நாகர்கோவில் தொகுதி எம்.பி.,யாகவும் இருந்துள்ளார்.
மறைந்த குமரி அனந்தனுக்கு, கடந்த 2024ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
congrass leader kumari anandhan passed away