காங்கிரஸை அதிரவிட்ட கொலை.. முன்னாள் அமைச்சரிடம் கிடக்குப்பிடி விசாரணை.!!
Congress ex mp investigated regards Jayakumar death
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான இவர் காணாமல் போன நிலையில் கடந்த மே 4-ம் தேதி தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்
ஜெயக்குமார் மரண வாக்குமூலம் எனக் குறிப்பிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும், பண விவகாரம் தொடர்பாக மருமகனுக்கும் எழுதிய 2 கடிதங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் பல அரசியல் பிரமுகர்களின் பெயரை குறிப்பிட்டுள்ளதால் போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், ஜெயக்குமாரின் மனைவி, மகன்கள், உறவினர் டாக்டர் செல்வகுமார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோருக்கு 15 தினங்களுக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான தனுஷ்கோடி ஆதித்தனிடம் பணகுடி காவல் ஆய்வாளர் ஆனி குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று விசாரணை நடத்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளளது. அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் நடந்த விசாரணையில் தனுஷ் கோடி ஆதித்தன் மற்றும் ஜெயக்குமார் இடையேயான பண பரிவர்த்தனைகள். இதற்கு உதவியாக இருந்த பாஸ்கரிடம் போலீஸார் விசாரணை நடத்தி அதன் விவரங்களை எழுத்துப்பூர்வமாக கையெழுத்து பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Congress ex mp investigated regards Jayakumar death