வயநாடு நிலச்சரிவு! காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஒரு மாத சம்பளம் கேரளா நிவாரண நிதி! - Seithipunal
Seithipunal


வயநாடு நிலச்சரிவு நிவாரணத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

கேரளா வயநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சீக்கி அதில் 350-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செல்வப்பெருந்தகை தெரிவித்ததாவது, கேரள மாநிலம் மாநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு வீழ்ச்சிக்கு 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து உடைமைகளை இழந்து பரிதாப நிலைக்கு சென்றுள்ளனர்.

இதில் 24 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இவர்களது துயரத்தை துடைக்க தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி சார்பாக 18 எம்எல்ஏக்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளோம்.

இந்தநிலையில், சென்னையில் பயிற்சி பெற்ற ராணுவ எஞ்சினியராக பணியில் சேர்ந்த கீதா எல்கேஇ என்பவர் வயநாடு பகுதியில் சூழல் மலைப்பகுதியில் 144 ராணுவ வீரர்களுடன் 36 மணி நேரத்தில் இரும்பு பாலம் அமைத்து மகத்தான சாதனை புரிந்துள்ளனர்.

நிலசரிவு படுகாயம் அடைந்தவர்களுக்கு ஜிப் லைன் கம்பி மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நர்சு சபீனாவுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress MLA one month salary announced to the Kerala government Selvaperunthagai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->