பாலியல் சில்மிஷம்! காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அப்துல் கைது! கட்சியிலிருந்து தற்காலிமாக நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்த அழகிரி! - Seithipunal
Seithipunal


பாலியல் புகாரில் சிக்கிய திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அப்துல் கனி ராஜா கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளார்.

காங்கிரஸ் நிர்வாகியின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில், கொடைக்கானல் போலீசார் அப்துல் கனி ராஜா மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், தற்போது அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

மேலும், பெண் வழக்கறிஞர்களிடமும் தவறாக நடக்கும் முயன்றதாக அப்துல் கனி ராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கேஎஸ் அழகிரி நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அவரின் அந்த அறிவிப்பில், கட்சி கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அப்துல் கனி ராஜா இன்று முதல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Sexual Abuse Arrest issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->