ரெயிலை கவிழ்க்க சதி!!! தண்டவாளத்தின் மேல் கற்கள்...! - கன்னியாகுமாரி எக்ஸ்பிரஸ்
Conspiracy to overturn the train Stones on the tracks Kanyakumari Express
கன்னியாகுமரி, இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு முன்னதாக இன்று அதிகாலை கன்னியாகுமரியில் இருந்து மங்களூரு நோக்கி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் இரணியல் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, அங்கு ரெயிலை கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதைப் பார்த்த லோகோ பைலட் அதிர்ச்சிஅடைந்தாலும் சற்றும் விரைந்து செயல்பட்டு உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.
இதனால் பெரும் அசம்பாவிதம்அங்கு நடக்கவிருந்ததை தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ரெயில்வே காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.தொடர்ந்து சுமார் அரைமணி நேரமாக தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றிய பிறகு பாதுகாப்பாக எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது உறுதியளிக்கப்பட்டது .
மேலும் கற்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த தண்டவாளத்தில் கற்களை வைத்தவர்கள் குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் மாட்டுபவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்க ரெயில்வே போலீசார் காத்துகொண்டுஇருக்கின்றனர்.
English Summary
Conspiracy to overturn the train Stones on the tracks Kanyakumari Express