தொகுதி பங்கீடு: திமுக- விசிக இடையே இன்று பேச்சுவார்த்தை.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

அது போல் தி.மு.க., கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லிம் லீக் உட்பட நான்கு கட்சிகளுடன் பேச்சு வார்த்தை முடிவடைந்த நிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

ஆனால் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தை முடிவு பெற்று ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. 

விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நடைபெற்றது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்று தொகுதிகள் கேட்டது. 

ஆனால் திமுக கடந்த 2019 ஆம் தேர்தல் போல இரண்டு தொகுதிகளை ஒதுக்க தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில் தி.மு.க., தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் தொகுதி பங்கீடு விரைவில் முடிக்க வேண்டும் என மு.க.. ஸ்டாலின் நேற்று நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்த தி.மு.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இன்று இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. மேலும் தி.மு.க கூட்டணியில் மூன்று தொகுதிகளை பெறுவதில் உறுதியாக இருக்கிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Constituency sharing Talks between DMK VCK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->