சொன்ன தேதியில் டெலிவரி செய்யாத பர்னிச்சர் கடை - அதிரடி உத்தரவிட்ட நுகர்வோர் நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


சொன்ன தேதியில் டெலிவரி செய்யாத பர்னிச்சர் கடை - அதிரடி உத்தரவிட்ட நுகர்வோர் நீதிமன்றம்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பர்னிச்சர் கடை ஒன்றில் அதேபகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் துரைராஜ் என்பவர் 24 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமாக செலுத்தி அலுவலக டேபிள் ஒன்று ஆர்டர் செய்துள்ளார்.

அப்போது, பர்னிச்சர் கடைக்காரர் இன்னும் இருபது நாள்களில் டேபிள் டெலிவரி செய்யப்படும் என்று துரைராஜிடம் தெரிவித்தார். ஆனால், கடைக்காரர்  சொன்னதுபோல் சரியான நேரத்தில் டேபிள் டெலிவரி செய்யப்படவில்லை. 

இதனால் பொறுமையை இழந்த வழக்கறிஞர் துரைராஜூ கடைக்காரருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதன் பின்னர் சம்பவம் தொடர்பாக குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் உள்ளிட்டோர்  விசாரணை செய்தனர்.

அப்போது அவர்கள் பர்னிச்சர் கடையின் சேவைக் குறைப்பாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடாக 15 ஆயிரம் ரூபாய், துரைராஜூ பர்னிச்சர் கடைக்கு கட்டிய 24,000 ரூபாய் மற்றும் வழக்கு செலவு 3000 ரூபாய் என்று மொத்தம் 42 ஆயிரம் ரூபாயை கடை உரிமையாளர் ஒரு மாத காலத்திற்குள் வழங்க உத்தரவிட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

consumer court fine to furniture shop in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->