கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜகவிற்கு தொடர்பு! பரபரப்பை கிளப்பிய ஆர்.எஸ் பாரதி! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜகவிற்கு தொடர்பு உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் அதிக மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை கூட்டித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசுகையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் நடந்த உடனே நீதி சரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரத்தை திசை திருப்பி பிரச்சனை செய்ய வேண்டும் என்பதாலேயே எடப்பாடி பழனிச்சாமி சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கிறார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வருகிறது.

கள்ளச்சாராயம் உயிர் போய் வைத்து எடப்பாடி பழனிச்சாமையும் பாஜகவும் அரசியல் செய்கின்றனர். இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க ஒத்துழைக்காமல் எதிர்க்கட்சித் தலைவர் நாடகமாடுகிறார் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Contact between AIADMK and BJP in the case of counterfeiting RS Bharthi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->