கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி மணல் லாரி மீது மோதல்!!! வசமாக சிக்கிய லாரி..?
container truck lost control and collided with sand truck
மணல் லாரி ஒன்று கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் வந்த கண்டெய்னர் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது.

இந்த திடீர் விபத்தில் கண்டெய்னர் லாரியின் முன்பக்கம் முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த மோதலின் காரணமாக இரு லாரிகளும் கையும் களவுமாக சிக்கியது.
இதனால் கண்டெய்னர் ஓட்டுநர் வெளியே வர முடியாமல் உள்ளேயே வெகு நேரமாக சிக்கி தவித்தார்.இந்தச் சம்பவ இடத்திற்கு தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்தனர்.
அங்கு விபத்தில் சிக்கிய டிரைவரை மீட்க கிரேன் வரவழைக்கப்பட்டு,கிரேன் உதவியுடன் மணல் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் கண்டெய்னர் லாரியில் சிக்கி தவித்த ஓட்டுநரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
container truck lost control and collided with sand truck