தொடர்ந்து எகிரும் மேட்டூர் அணை!...இன்று அணையின் நீர்மட்டம் 106.48 அடியாக உயர்வு! - Seithipunal
Seithipunal


காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில், காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக கடந்த வாரம் டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

இதற்கிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

தொடர் நீர்வரத்து அதிகரிப்பால், அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 2,500 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இன்று காலை நேர நிலவரப்படி மேட்டூர் அணையின்  நீர்மட்டம் 106.48 அடியாக உயர்ந்து உள்ளது.

மேலும், நீர் இருப்பு 73.49 டி.எம்.சி.யாக உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Continue ekirum mettur dam today the water level of the dam rose to 106 and 48 feet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->