குற்றால அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை!....சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்! - Seithipunal
Seithipunal


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள குற்றாலம் அருவிகளில் சீசன் முடிந்த நிலையிலும் அவ்வப்போது பெய்யும் மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. சில நாட்களாக மழை இல்லாததால் நீர் வரத்து படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில், கடந்த  9-ம் தேதி திடீரென மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி பகுதியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் திடீரென பெய்த மழை காரணமாக  ஐந்தருவியில் மிதமான அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தற்காலிகாமாக தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஐந்தருவியை தொடர்ந்து மெயின் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் குற்றாலம் பகுதியில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி ரம்மியாக உள்ளது.

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Continued ban on bathing in coutralam waterfalls Tourists are disappointed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->