குன்னூர்ஸ்ரீதந்தி மாரியம்மன் திருக்கோயில் திருத்தேர் திருவிழா..புஷ்ப பல்லாக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மன்!
Coonoor Srithanthi Mariamman Temple Car FestivalGoddess appeared to the devotees in a pushpa palanquin
குன்னூர் பிரசதிபெற்ற அருள்மிகு ஸ்ரீதந்தி மாரியம்மன் திருக்கோயிலில் திருத்தேர் திருவிழாவில் சிறப்பு புஷ்ப பல்லாக்கில் அம்மன் அலங்காரத்துடன் குன்னூர் நகர பல்வேறு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
குன்னூர் பிரசதிபெற்ற நூற்றாண்டு பழமைமிக்க அருள்மிகு ஸ்ரீதந்தி மாரியம்மன் திருக்கோயிலில் திருத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவந்தது. திருக்கல்யாண உற்சவம், பூகுண்டம் இறங்குதல், திருத்தேர் திருவிழா, போன்ற பல்வேறு நிகழ்வுகள் திருவிழாவில் நடைபெற்றுது.
அதனை தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வான 63 ஆம் ஆண்டு புஷ்ப பல்லாக்கு வீதி உலா நடைபெற்றது. அதனை தொடர்ந்து குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து பால்குட ஊர்வலம் தந்தி மாரியம்மன் கோவில் வந்தடைந்தது.பின்பு அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.இறுதியாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை அம்மனின் சிறப்பு புஷ்ப பல்லாக்கில் அலங்காரத்துடன் குன்னூர் நகர பல்வேறு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார்.இந்த புஷ்பபல்லாக்கில் குன்னூர் நகராட்சி நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள், மற்றும் பக்தர்கள் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.
English Summary
Coonoor Srithanthi Mariamman Temple Car FestivalGoddess appeared to the devotees in a pushpa palanquin