பொருள்கள் வாங்காமலேயே வாங்கியதாக குறுஞ்செய்தி.! கூட்டறவுத் துறை எச்சரிக்கை.!
Cooperative depat warned SMS ration items were purchased without purchase
தமிழ் நாட்டில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் முப்பத்து நான்காயிரத்து எழுநூற்று தொண்ணூறு நியாய விலை கடைகள் உள்ளது.
இந்தக் கடைகள் மூலம் அரசு அத்தியாவசிய உணவு பொருட்களை பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இதன்மூலம் 2 கோடியே 23 லட்சத்து 74 ஆயிரத்து 842 குடும்ப அட்டைத் தாரர்கள் பயன்பெறுகிறார்கள்.
இந்நிலையில் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்காமலேயே வாங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் போலி பில் போடும் நியாய விலை கடையின் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்த முறைகேடுகளை கண்காணிக்காமல் இருக்கும் சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Cooperative depat warned SMS ration items were purchased without purchase