வேகம் எடுக்கும் கொரோனா பரவல்.. தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 400ஐ தாண்டியது..!!
Corona cases crossed 400 per one day in TamilNadu
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சராசரியாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 386 ஆக இருந்த நிலையில் நேற்று 401 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று கொரோனா தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது ஏற்படும் கொரோனா பரவல் காரணமாக பெரிய அளவில் மரணம் நிகழவில்லை.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில் தற்போது 400ஐ தாண்டி உள்ளது. உலக அளவில்ஜXBB.1 மற்றும் XBB.1.15 வைரஸ் பரவல் சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. முக்கியமாக சீனாவில் அதிக அளவில் பரவிய நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதற்கு XBB.1.16 வைரஸ்தான் காரணமாக இருக்கலாம்.
திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது. நேற்று இந்தியாவில் மட்டும் மொத்தம் 5880 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7 மாதங்களில் பதிவான உச்சபட்ச நோய் தொற்று எண்ணிக்கையை அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று 401 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்த நபர்கள் எண்ணிக்கை 4727 ஆகும். இதில் நோய் தோற்று விகிதம் 8.4% என அதிகரித்துள்ளது. சென்னையில் 110 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
பொதுமக்கள் சில கட்டுப்பாட்டுடன் பொது இடங்களில் செல்லும் பொழுது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
English Summary
Corona cases crossed 400 per one day in TamilNadu