அதிரடி காட்டும் கொரோனா.. "சென்னையில் ஒருவர் பலி"..ஒரு நாள் பாதிப்பு 500ஐ தாண்டியது"..!! - Seithipunal
Seithipunal


கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து நிலையில் இன்று ஒரே நாளில் 500-ஐ தாண்டியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 138 பேருக்கும், கோயம்புத்தூரில் 55 பேருக்கும், கன்னியாகுமரியில் 50 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டில் 22  மாவட்டங்களில் கொரோனா தொற்று ஒற்றை இலக்கத்தில் இருந்து வருகிறது. திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகவில்லை.

அதேசமயம் இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 366 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,000-த்தை தாண்டியுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 3,195 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona infection in TamilNadu crossed 3000


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->