தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 6 மடங்கு அதிகரிப்பு! முக கவசம் கட்டாயம் - பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு! - Seithipunal
Seithipunal


அண்மை காலமாக நாடு முழுவது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் சோலா மாநிலங்களில் முக கவசம் அணிவது கட்டயமாக்க ஆலோசனை நடந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்ரமணியனிடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், நாளை முதல் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 

மேலும், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், அவர்களுடன் வருவோர், உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் 100 சதவீதம் முகக்கவசம் அணிய வேண்டும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதன்  தொடர்ச்சியாக முகக்கவசம் அணிவது குறித்து அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 6 மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, மருத்துவர்கள், ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நோயாளிகள், அவர்களது உதவியாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

தேவைப்பட்டால், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 இன் விதிகளைப் பயன்படுத்தி கட்டாயமாக முகக்கவசம் அணிவதை அமல்படுத்த வேண்டும்" என்று, அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona mask Tamilnadu 2023 march


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->