ஈபிஎஸ் சிக்குவாரா? தனபாலிடம் சிபிசிஐடி விசாரிக்கலாம்! ஊட்டி நீதிமன்றம் அனுமதி! - Seithipunal
Seithipunal


கொடநாடு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சாட்டில் இருந்த தனபாலுக்கு சமன் அனுப்பி விசாரணை நடத்தலாம் என விசாரணை நீதிமன்றம் சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கி உள்ளது.

நீலகிரி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கார் டிரைவர் கனகராஜ் சேர்க்கப்பட்டார். அடுத்து சில நாட்களில் சேலத்தில் நடந்த கார் விபத்தில் கனகராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மேலும் இந்த வழக்கில் சயான், வளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தனிப்படை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2022 அக்டோபர் முதல் சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

இந்த நிலையில் கார் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாகவும், தனது தம்பி கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும், திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்றும் சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தனபாலிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் ஊட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அப்துல் காதர் தனபால் தற்போது ஜாமினில் உள்ளதால் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி விசாரிக்கலாம் என்றும், இதற்காக தனி உத்தரவு பிறப்பிக்க தேவை இல்லை என்றும் விசாரணைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதனால் கூடிய விரைவில் சிபிசிஐடி போலிசார் தனபாலுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்த தனபாலிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court allow CBCID interrogate dhanapal in KodaNadu case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->