ஜாபர் சாதிக்கிற்கு மேலும் சிக்கல் - காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்த நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். 

இதையடுத்து கடந்த ஜூன் 26ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கை கைது செய்தது. இதையடுத்து அவர் மாற்று வாரண்ட் மூலம் திகார் சிறையில் இருந்து கொண்டு வரப்பட்டு, சென்னை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில் இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணைக்காக ஜாபர் சாதிக் இன்று நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி அல்லி, ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்ததோடு, ஜூலை 19ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

இதனிடையே விசாரணையின் போது அமலாக்கத்துறை துன்புறுத்தியதா என்று நீதிபதி, ஜாபர் சாதிக்கிடம் கேட்டபோது, ஏற்கனவே இந்த வழக்கில் அமலாக்கத்துறை தன்னை விசாரித்து விட்டதாகவும், தற்போது 4 முக்கிய நபர்களை இந்த வழக்கில் இணைக்க முயற்சிக்கும் அமலாக்கத்துறை அவர்களது பெயரை கூற வேண்டுமென தன்னை துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court Allowed ED to Take Jaffer Sadiq into Custody


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->