BSP தலைவர் கொலை வழக்கு - கைது செய்யப்பட்ட அஞ்சலைக்கு நீதிமன்ற காவல்.!
court custody to accuest anjalai for amstrong murder case
சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரைக்கும் 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களின் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்ததில் ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் யார்-யார்? என்ற விவரம் தெரியவந்தது. அதன் அடிப்படையில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் மலர்கொடி, வழக்கறிஞர் ஹரிஹரன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த கொலை வழக்கில் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண் தாதாவும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான அஞ்சலையும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அஞ்சலையின் வங்கி கணக்குகளையும் ஆராய்ந்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆம்ஸ்டாராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலைக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அஞ்சலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
court custody to accuest anjalai for amstrong murder case