தஞ்சை சிறுமி கொலை வழக்கு - குற்றவாளிகளுக்கு 13 நாள் நீதிமன்ற காவல்..!
court custody to six peoples for thanjavur girl murder case in chennai
சென்னையில் உள்ள அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 1-ம் தேதி கே-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் பதினான்கு வயது சிறுமி உயிரிழந்தது குறித்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இறந்து போன சிறுமி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முகமது நிஷாத் என்பவரின் குழந்தை பராமரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் என்பதும், இறந்து போன சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிறுமி வசித்து வந்த வீட்டைச் சேர்ந்த முகமது நிஷாத் மற்றும் அவரது மனைவி நிவேதா என்ற நாசியா, நண்பர்களான லோகேஷ் மற்றும் அவரது மனைவி ஜெயசக்தி, அவர்களது வீட்டு வேலைக்கார பெண்மணி மகேஸ்வரி, முகமது நிஷாத்தின் சகோதரி சீமா பேகம் உள்ளிட்டவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் கடந்த 3 மாதங்களாக சிறுமியை அடிக்கடி சித்ரவதை செய்தும்,சிகரெட்டால் சூடு வைத்தும், துன்புறுத்தி வந்துள்ளதால் கடந்த 31.10.2024 அன்று சிறுமியை தாக்கியதில் அவர் இறந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் குற்றவாளிகள் ஆறு பேரை நேற்று கைது செய்தனர். இவர்கள் 6 பேரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் வரும் 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
English Summary
court custody to six peoples for thanjavur girl murder case in chennai