நெல்லை மாநகராட்சி ஆணையாளருக்கு பிடிவாரண்ட்.!!
Court issued arrest warrant for Nellai Corporation Commissioner
நெல்லை மாநகராட்சியில் மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட தியாகராஜ நகர் பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் அழகு ரத்தினம் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அவரது வீட்டிற்கு புதிய குடிநீர் இணைப்பு கேட்டு மாநகராட்சியில் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது அவருக்கு 6,500 ரூபாய் புதிய குடிநீர் இணைப்பிற்கும், அதேபோன்று பாதாள சாக்கடை கையாளும் திட்டத்திற்கும் கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளனர். அதனை கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கான புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.
மீண்டும் கடந்த 2018 ஆம் ஆண்டு குடிநீர் இணைப்பு கோரி விண்ணப்பம் செய்துள்ளார். அப்போது மேலும் 1,500 ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியது அடுத்து அதனையும் அவர் செலுத்தி உள்ளார். இந்த நிலையில் மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு மன்றத்தில் அரசு நிர்ணயத்தை கட்டணத்தை விட அதிகமாக செலுத்தியுள்ளதாக புகார் அளித்தார்.
அதனை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு மன்றம் அழகு ரத்தினம் கூடுதலாக செலுத்திய 6,500 ரூபாய் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 15 ஆயிரம் ரூபாய் மற்றும் வழக்கு செலவு 3000 ரூபாய் என மொத்த தொகையையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகராட்சியின் மேலப்பாளையம் துணை ஆணையர் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல மாதம் ஆகிய நிலையில் பாதிக்கப்பட்ட நபருக்கு பணம் மீண்டும் செலுத்தப்படாததால் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். அதனை விசாரித்த நீதிபதி நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேலப்பாளையம் மண்டல துணை ஆணையாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு உள்ளார்.
English Summary
Court issued arrest warrant for Nellai Corporation Commissioner