மழைநீர் ஒழுகிய அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து... நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்காக வக்கீல் சோமசுந்தரம் என்பவர் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்தார். பின்பு பேருந்தில் பயணம் செய்த போது, இருக்கைகள் மிகவும் மோசமாக இருந்ததோடு நள்ளிரவில் பெய்த மழையால் பேருந்து கூரையில் இருந்து மழை நீர் ஒழுங்கியுள்ளது.

இதனால் சோமசுந்தரம் இதுகுறித்து நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் தனக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். 

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையில் பயணி சோமசுந்தரத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

court order 50 thousand compensation for govt transport bus


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->