படிப்பை பாதியில் நிறுத்திய மாணவிக்கு சான்றிதழ் வழங்க மறுத்த கல்லூரி நிர்வாகம் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!!
court order to college administration certificate to dropped education out student
படிப்பை பாதியில் நிறுத்திய மாணவிக்கு சான்றிதழ் வழங்க மறுத்த கல்லூரி நிர்வாகம் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆர்ஷியா பாத்திமா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "நான் வாசுதேவநல்லூரில் உள்ள எஸ்.தங்கப்பழம் வேளாண் கல்லூரியில் பி.எஸ்சி வேளாண் பிரிவில் சேர்ந்து படித்து வந்தேன்.
ஆனால், கொரோனோ தொற்று காலத்தில் எனக்கு திருமணம் நடைபெற்றது. எனது கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் நானும் அங்கு செல்வதற்காக எனது சான்றிதழ்களை வழங்குமாறு கேட்டேன்.
அதற்கு, கல்லூரி நிர்வாகம் 2 லட்ச ரூபாய் செலுத்திவிட்டு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துவிட்டது. ஆகவே, எனது சான்றிதழ்களை வழங்க கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘’அரசு தரப்பில் இடைநிற்றல் கட்டணம் தொடர்பாக முன்பே தெரிவிக்கப்பட்டது. மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிக்க சட்ட அடிப்படையில் ஏராளமான வழிகள் உள்ளன. மாணவரின் சான்றிதழ்களைப் பிடித்து வைத்துக்கொள்ள கல்லூரி நிர்வாகத்திற்கு எந்த உரிமையும் இல்லை.
சான்றிதழ்களை வைத்துக்கொள்ள அவர்கள் ஒன்றும் கடன் வழங்குபவர்கள் அல்ல. பத்து வேலை நாட்களுக்குள் மாணவியின் சான்றிதழ்களைத் திரும்பி வழங்க வேண்டும். கட்டணத்தை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் முன்னெடுக்கலாம்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.
English Summary
court order to college administration certificate to dropped education out student