கோவை பாரதியார் பல்கலை : மாணவர்களின் விடா முயற்சியால் பாடத்திட்டம் மாற்றும் முடிவு கைவிடல்.!
covai barathiyar university syllabus change
கோயம்புத்தூரில் பாரதியார் பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளில் பி.காம்., முதலாமாண்டு மாணவர்களுக்கு எம்.எஸ்., ஆபிஸ் பாடம் இருந்தது.
இந்தப்பாடம் மாற்றப்பட்டு அதற்கு மாறாக ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வுக்கு 20 நாட்களே இருந்த நிலையில், பாடத்திட்டத்தை மாற்றுவது மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் பாடத்திட்டத்தை மாற்றும் முடிவை கைவிட்டுள்ளது. மேலும், முதல் செமஸ்டரில் புதிய பாடங்கள் பின்பற்றப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல் தெரிவித்ததாவது, பி.காம்., மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றும் முடிவு நிறுத்தப்பட்டது. முதல் பருவத் தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டமே பின்பற்றப்படும். இரண்டாவது பருவத தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்துவது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும். அதற்கு ஒப்புதல் கிடைத்தால் நடைமுறையில் அமல்படுத்தப்படும் என்றுத் தெரிவித்தார்.
English Summary
covai barathiyar university syllabus change