மீண்டும் ஒர் வேங்கைவயல்? அரசு பள்ளி நீர் தொட்டியில் வீசிய துர்நாற்றம்! திறந்து பார்த்தவருக்கு பேரதிர்ச்சி!
Cow dung mixture in govt school water tank in viruthunagar
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சின்னமூக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வரும் சூழலில் சமையலுக்காக பயன்படுத்துவதற்கு டேங்க் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பள்ளிக்கு அருகே மற்றொரு டேங்க் அமைந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை வழக்கமாக காலை சிற்றுண்டி சமைப்பதற்கு சமையல் வேலையில் ஈடுபடும் பெண்கள் பள்ளிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது சமைப்பதற்காக அருகில் இருந்த டேங்கில் இருந்து தண்ணீர் திறந்த போது துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் உள்ளே என்ன இருக்கிறது என பார்த்தபோது மாட்டு சாணம் இருந்தது தெரியவந்தது. இது இது குறித்து தலைமை ஆசிரியரிடம் தகவல் அளிக்கப்பட்டதால் சம்பவ இடத்திற்கு விரைந்த தலைமையாசிரியர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மாட்டு சாணம் கலக்கப்பட்ட டேங்க்கை உடனடியாக இடித்து அப்புறப்படுத்தினர். மேலும் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவகைகளில் பட்டின மக்கள் பயன்படுத்திய தண்ணீர் டேங்கில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Cow dung mixture in govt school water tank in viruthunagar