கடலூர் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொன்று எரிப்பு! ஒவ்வொரு அறையில் ஒருவர்.. வெளியான முதல்கட்ட தகவல்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் காராமணி குப்பம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்கட்ட தகவலின்படி, ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்த ஐடி ஊழியர் சுதன்குமார், அவரது மகன் மற்றும் தாய் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த அந்த வீட்டின் ஒவ்வொரு அறையில் ஒருவர் என தீ வைத்து எரிக்கப்பட்ட உடல் கிடந்துள்ளதை கண்டு போலீசாரே அதிர்ந்து பொய் உள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து மேலும் வெளியான தகவலின் படி, இன்று காலை அந்த வீட்டிலிருந்து புகை வந்ததாகவும், துர்நாற்றம் வீசியதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

இதனை அடுத்து நெல்லிக்குப்பம் காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். 

வீட்டில் இருந்த மூன்று அறைகளில் ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு உடல் என எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மேலும் வீடு முழுவதும் ஆங்காங்கே ரத்தம் சிதறி கிடந்திருப்பதை கண்ட போலீசார், இது நிச்சயமாக படுகொலை தான் என்பதை உறுதி செய்தனர். 

மேலும் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Fire Family Hyderabad


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->