#JustIn : கடலூர்.. வெள்ள பாதிப்பு பகுதிகள் கண்டுபிடிப்பு.. ஒன்றரை லட்சம் மக்களுக்கு செய்யப்பட்ட ஏற்பாடு.!
cuddalore flood alert and govt recover plans
தற்போது தென்மேற்கு பருவ மழை முடிந்து, வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. இந்த வடகிழக்கு பருவமழையினால் சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால் தமிழக அரசு வெள்ள தடுப்பு பணிகளில் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருகின்றது.
இத்தகைய சூழலில் கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளில் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியபோது, "மழையினால் அதிகப்படியாக பாதிக்கக்கூடிய 228 பகுதிகள் கடலூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெள்ள பாதிப்பின் போது தங்க வைக்கப்படுவதற்காக இடங்கள் தயார் செய்யப்பட்ட நிலையில் இருக்கின்றது. ஒன்றரை லட்சம் பேர் தங்கும் அளவிற்கு இட வசதிகள் தற்போது வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
cuddalore flood alert and govt recover plans