கடலூரில் மர்ம காய்ச்சல்! மருத்துவமனையில் ஒரே நேரத்தில் குவிந்த மக்களால் பரபரப்பு!  - Seithipunal
Seithipunal


இன்று காலை முதல் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அலைமோதிய நிலையில் உள்ளது. 

பொதுவாக கடுமையான வெயில் காலத்திலிருந்து, மழை காலத்திற்கு வரும் போது காய்ச்சல், இருமல், சளி போன்ற பாதிப்புகளால் அவதிப்படும் மக்கள் ஒரே நேரத்தில் மருத்துவமனைகளில் குவிவது வழக்கம்.

இந்த நிலையில் கடலூரில் ஒவ்வொரு நாளும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனையின் சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பியுள்ளன.

சராசரியாக, தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேல் காய்ச்சல் குறையவில்லை என்றால், நோயாளிகள் உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

“பருவநிலை மாற்றம் காரணமாக கிருமி தொற்றுகள் அதிகரித்து, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

அதேசமயம், காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் தீவிரமடைந்தால், தாமதமின்றி மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

தற்போது கடலூர் மருத்துவமனையில் உரிய மருந்துகளையும் பரிசோதனைகளையும் விரைவாக மேற்கொள்வதற்காக, மாவட்ட நிர்வாகம் கூடுதல் பணியாளர்களை நியமித்து, சுகாதார உதவிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Govt Hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->