சட்டவிரோத கருக்கலைப்பில் உயிரிழந்த பெண்! கடலூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கீழ்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் அமுதா தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் தற்பொழுது அமுதா கருவுற்று நான்கு மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அச்சகளத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் வடிவேலன் என்பவரின் மருந்தகத்தில் சட்டவிரோதமாக குழந்தையின் பாலினத்தை அவர்கள் அறிந்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. 

இந்த சோதனையில் கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரிய வரவே அங்கேயே இரண்டு நாட்களுக்கு முன்பு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளனர். இதனை அடுத்து சொந்த ஊரான கீழ்குறிச்சி கிராமத்திற்கு வந்தவுடன் கடந்த இரண்டு நாட்களாக அமுதாவிற்கு அதிகப்படியான ரத்தப்போக்கு இருந்துள்ளது. 

இதன் காரணமாக நேற்று மாலை உடல்நிலை மோசமானதால் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அமுதா சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அமுதா நேற்று இரவு பரிதமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வேப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேப்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேப்பூர் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு அதிக அளவில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு சட்டவிரோதமாக செயல்படும் கருக்கலைப்பு மையங்களை உடனடியாக மூட வேண்டும் என பொதுமக்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore pregnant Woman died in illegal abortion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->