கடலூர்: தலைமை ஆசிரியரை நான் லவ் பண்ணேன், கிஸ் பண்ணேன்! கைது பண்ணாதீங்க! அதிரவைக்கும் திருப்பம்! - Seithipunal
Seithipunal


கடந்த ஏழாம் தேதி கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே எருமனூரில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாக கூறி, அவரை அடித்து அரை நிர்வாணமாக கிராம மக்கள் அழைத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி, தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதால், அந்த ஊரை சேர்ந்த மக்களும், இளைஞர்களும், மாணவிகளின் பெற்றோர்களும், பள்ளியில் புகுந்து தலைமை ஆசிரியரை அடித்து, உதைத்து அவரை அரை நிர்வாணமாக சாலையில் இழுத்துச் சென்றனர். 

தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடமிருந்து தலைமை ஆசிரியரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 

இதற்கிடையே அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர், தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால், இரண்டு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். 

இதற்கிடையே சம்பந்தப்பட்ட அந்த தலைமை ஆசிரியர் மடியில் அமர்ந்து கொண்டு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட தலைமை ஆசிரியரை கைது செய்யக் கூடாது என்று சம்பந்தப்பட்ட அந்த மாணவி குரல் எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் குவிந்த நிலையில் அங்கு வந்த அந்த மாணவி தலைமை ஆசிரியரை கைது செய்யக்கூடாது நான் அவரை காதலித்தேன் அதனால் அவருக்கு முத்தம் கொடுத்து இது என்னுடைய தனிப்பட்ட விவகாரம் என்று தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மாணவியை அந்த இடத்திலிருந்து உடனடியாக அழைத்துச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuddalore School HM College Girl Love


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->