கடலூர் வாகன ஓட்டிகள் உஷார்., போலீஸ் தரப்பில் வெளியான எச்சரிக்கை.!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாநகராட்சி : சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாநகரத்தில் மையப் பகுதியாக உள்ள திருப்பாதிரிப்புலியூரில் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் பேருந்து நிலையம், பூ மார்க்கெட், வணிக வளாகம், துணிக்கடை, நகைக்கடை, பிரபலமான கோவில்கள், ரயில் நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.

இதன் காரணமாக நாள் முழுவதும் இந்த சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் போவதும் வருவதுமாக பரபரப்பாக காணப்படும். குறிப்பாக இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், ஷேர் ஆட்டோ அதிக அளவில் சென்று வருகின்றன.

அதே சமயத்தில் இந்த சாலையில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக, சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடலூர் போக்குவரத்து போலீசார் தரப்பில், லாரன்ஸ் ரோடு பகுதியில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு விழிப்புணர்வு செய்யப்படுகிறது. சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று அறிவுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வையும் போலீசார் செய்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் வாகனங்கள் பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuddalore traffic police announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->