3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்!... ..4 நபர்களுக்கு மேல் கூடினால் சட்டப்படி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


மாமன்னர் பூலித்தேவனின் 309-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2ம் தேதி காலை 10 மணி வரை பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா சட்டப்பிரிவு 163 (1)-ன் படி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 இந்த ஊரடங்கு அறிவிப்பின் படி, 4 நபர்களுக்கு மேல் கூடி நின்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இதற்கிடையே 1750இல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்த போது, பூலித்தேவன்  தனது படையுடன் திருச்சிக்கு சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார்.

இதில் பூலித்தேவன் வெற்றிபெற்றதாக  'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது.  மேலும், பூலித்தேவர் ஆட்சி செய்த காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவும் ஆகும்.

ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலத்தில்,  பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை  உணர்ந்து, அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Curfew for 3 days Legal action if more than 4 people gather


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->