இலங்கை பெண்ணிடம் தாலி கொடி பறிமுதல்; மீண்டும் ஒப்படைத்த சுங்க அதிகாரிகள்..!
Customs officials hand over confiscated tali chain to Sri Lankan woman
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில், திருமணம் முடித்த பெண் உள்ளிட்ட மூன்று பெண்கள் குடும்பத்தினருடன் சென்னைக்கு வந்துள்ளனர். அப்போது,சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், இந்த மூன்று பெண்கள் அணிந்திருந்த தாலிக்கொடி, வளையல்கள் போன்றவை கடத்தல் நகைகள் எனக்கூறி, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, அப்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அதில் பிறப்பித்த உத்தரவில், 'பெண்களுக்கு தாலி மிக முக்கியமானது. தாலி அணிந்து வருவது கடத்தல் அல்ல.
'எனவே, சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தாலிக் கொடியை, இலங்கை தமிழ் பெண்ணுக்கு திருப்பித் தர வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பறிமுதல் செய்த தாலிக்கொடியை திரும்ப பெறுவதற்காக, அப்பெண் குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு, சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகம் வந்துள்ளனர். சென்னை நீதிமன்ற உத்தரவின்படி அப்பெண்ணிடம் தாலிச் செயின்களை சுங்க அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
English Summary
Customs officials hand over confiscated tali chain to Sri Lankan woman