ரெமல் புயல் .. 9 துறைமுகங்களில் எச்சரிக்கை .. 2ம் எண் புயல் கூண்டு ஏற்றம்! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் தணிந்து மக்கள் மழையால் சற்று நிம்மதியடைந்த நேரத்தில், இன்று முதல் மீண்டும் வெயில் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், வங்கக்கடலில் புதிதாக 'ரெமல்' புயல் உருவாகியுள்ளது. வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றுழத்த தாழ்வு மண்டலமாக மாறி, தீவிர புயலாக உருமாறிய 'ரெமல்' இன்று சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே மேற்கு வங்க கடற்கரை மற்றும் வங்கதேசம் இடையே கரையைக் கடக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி மற்றும் புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக சனிக்கிழமையான நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக இன்று 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cyclone 2 installed in 9 ports in Tamilnadu due to remal cyclone


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->