தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு!! எவ்வளவு தெரியுமா?
Dearness allowance increased for TNgovt employees
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வால் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.
கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அகவிலைப்படையை உயர்த்தி வழங்கப்படும் எனவும், அழகாகவிலைப்படி உயர்வின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.2546.16 கோடி கூடுதலாக செலவாகும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்குவதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதற்கான போனஸ் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்தான அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Dearness allowance increased for TNgovt employees