சங்கரன் கோவில் கொலை வழக்கு - 4 பேருக்கு மரண தண்டனை விதிப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள உடப்பன் குளம் பகுதியில் வசிக்கும் சில சமூகத்தை சேர்ந்த மக்கள், ஆங்கிலப் புத்தாண்டு அன்று மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனால், இரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. 

இந்த நிலையில் உப்பன் குளம் பகுதியில் நடைபெற்ற சுப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த வேணுகோபால், முருகன், ஆகியோர் கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் வந்துள்ளனர். அப்போது வடமன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக அப்போதைய சங்கரன்கோவில் டிஎஸ்பி நடத்திய விசாரணையின் பெயரில் திருவேங்கடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 25 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில், கொலை செய்த குற்றம் வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த குற்றம் உள்ளிட்டவைகளுக்காக 4 பேருக்கு மரண தண்டனையும், 5 நபருக்கு தலா 5 ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு 2 ஆயுள் தண்டனை விதித்து நெல்லை வன்கொடுமை நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பு வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death penalty to 4 peoples for sangaran kovil murder case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->