வெடித்து சிதறிய பட்டாசு ஆலைகளால் பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில் தீபாவளி நெருங்குவதால் இரவு பகல் பாராமல் பட்டாசு தயாரிக்கும் பணி மும்முறமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இன்று கிச்சாநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் மருந்து குடோனில் ஏற்பட்ட விபத்தில் அங்கு வேலை செய்து வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

அதேபோன்று எம்.புதுபட்டியில் செயல்பட்டு வந்த கனிஷ்கர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களின் மேலும் 3 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் இரு வேறு பட்டாசு ஆலைகள் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 8ஆக உயர்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll rises 8 in sivakasi firecrackers explosion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->