பெரும் சோகம்! கதறும் மக்கள்..திணறும் மருத்துவர்கள்..பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதட்டமான சூழல் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று அதேபகுதியில் கலாச்சாராயம் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறைந்த விலையில் விற்கப்பட்ட கலாச்சாராயத்தை வாங்கி குடித்தவர்களுக்கு வாந்தி, தலைவலி மயக்கம் ஏற்பட்டதால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரவீன், சுரேஷ், சேகர், மகேஷ், ஜெகதீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்துக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தசம்பவம் தமிழ்நாடு ம்,முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கள்ளச்சாராயம் விற்றவரை கைது செய்தது காவல் துறை. அதனை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். 

இதுநிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதட்டமான சூழல் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 90 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மூன்று பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தபால்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll rises to 33 after drinking fake liquor


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->