கள்ளக்குறிச்சி || தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை - ஒரேநாளில் எவ்வளவுத் தெரியுமா?  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சோி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 18-ந்தேதி நள்ளிரவு முதல் சுமார் 100-க்கும் மேற்பட்டோா் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்துள்ளனர். இதில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

உடனே அவா்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து சிலா் மேல்சிகிச்சைக்காக புதுச்சோி ஜிப்மா், சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 19-ந்தேதி 17 பேரும், 20-ந்தேதி 24 பேரும், நேற்று முன்தினம் 9 பேரும் என்று மொத்தம் 50 போ் உயிாிழந்தனா். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கியது. 

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைக்கப்பட்டு, இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும், மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்பவர்களில் சிலர் தினசரி மரணத்தை தழுவி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று மேலும் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்னர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death troll 55 increase in kallakurichi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->