திருப்பூர் வெடி விபத்து - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் பொன்னம்மாள்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக் - சத்யபிரியா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது வீட்டின் முதல் தளத்தில் உள்ள மூன்று அறைகளில் சிலர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கார்த்திக் வீட்டில் இருந்து வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அந்த கட்டிடத்தில் இருந்து கரும்புகையும் வெளியேறியது. இதனால் அக்கம்பக்கத்தினர், அலறியடித்தபடி வீட்டிற்குள் ஓடினார்கள்.

இந்த விபத்தில் கார்த்திக் வீட்டின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், அங்கிருந்த மளிகைக்கடை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இதேபோல் எதிரில் இருந்த 10-க்கும் மேற்பட்ட காம்பவுண்டு வீடுகளின் மேற்கூரை ஓடுகள் மற்றும் அங்கு இருந்த பொருட்களும் சேதமடைந்தன. மேலும், இந்த சம்பவத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உடல் சிதறி பலியாகிக் கிடந்தார்.

மேலும் இந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களில் குழந்தை உள்பட இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுவரைக்கும் பலி எண்ணிக்கை 3 ஆக இருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிரஞ்சனா என்ற 6 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது. இதன் மூலம் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death troll increase in tirupur bomb blast


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->