தீபத் திருவிழா : டிசம்பர் 6ம் தேதி அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழத்தில் சிறப்பு வாய்ந்த கோவிலாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பௌர்ணமி கிரிவலம் என பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரபலமானதாகும். கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவண்ணாமலை அருண்ச்சலேஸ்வரர்  கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 24ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் டிசம்பர் 6ம் தேதி மாலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். 

இந்த நிலையில் அன்று ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள் என்பதால் டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

December 6 local holiday for thuruvannamalai district


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->